How to turn on bitlocker?
முதலில் உங்கள் சிற்றடக்கியை (PEN DRIVE-ஐ) கணினியில் இணைக்கவும்
அடுத்து சிற்றடக்கி (PEN DRIVE-ஐ) தேர்ந்தெடுத்து அதை வலது விசையை
சொடுக்கவும்
அதில் "TURN ON BITLOCKER" என்பதை தேர்ந்தெடுக்கவும்
BITLOCKER அதன் செயலை துவங்கும்
பிறகு "USE A PASSWORD TO UNLOCK THE DRIVE" எனுமிடத்தில் தேர்வு
செய்யவும்
அடுத்து உங்களுக்கு வேண்டிய கடவுச்சொல்லை இருமுறை கொடுத்து
"NEXT-ஐ" அழுத்தவும்
அடுத்து "SAVE THE RECOVERY KEY TO A FILE" என்பதை தேர்ந்தெடுக்கவும்
உங்களிடம் PRINTER இருந்தால் RECOVER KEY-யினை PRINT
எடுத்துக்கொள்ளலாம்
பிறகு கிடைக்கும் திரையில் உங்கள் கடவுச்சொலிற்கான மீட்டெடுக்கும்
திறவுகோல் எங்கே சேமிக்க வேண்டுமோ தேர்ந்தெடுத்து "SAVE-ஐ "
அழுத்தவும்
இது உங்கள் கடவுச்சொல்(PASSWORD) உங்களுக்கு மறந்துவிட்டால் அதனை மீட்டெடுக்க இதில் இருக்கும் "KEY-ஐ" COPY செய்து PASTE செய்தால் சிற்றடக்கி திறந்துவிடும் ,உங்கள் கடவுச்சொல்லை (PASSWORD-ஐ) மாற்றியமைக்கும் வாய்ப்பு கிடைக்கும்
அடுத்து "START ENCRYPTING" அழுத்தவும்
ENCYRPT ஆக சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்
ENCRYPTION ஆனதும் அதற்கான அடையாளக்குறி உங்கள் சிற்றடக்கியில்(PEN DRIVE-ல்) தோன்றும்
முடிந்தது இனி உங்கள் சிற்றடக்கி(PEN DRIVE) பாதுகாப்பானதாக இருக்கும்
உங்கள் சிற்றடக்கிற்கு (PEN DRIVE-க்கு) கடவுச்சொல் (PASSWORD) பாதுகாப்பு முறையை அளிக்கும் வழியினை காணலாம்
இந்த முறையில் உங்கள் கணினியில் உள்ள எந்த DRIVE-ஐ வேண்டுமானால் நீங்கள் கடவுச்சொல் (PASSWORD) பாதுகாப்பு முறையை கொடுக்கலாம்
இந்த பாதுகாப்பு முறை WINDOWS ENTERPRISE மற்றும் WINDOWS ULTIMATE வகை இயங்கு தளம்
(OPERATING SYSTEM) மற்றும் அதற்கு மேலான இயங்கு தளங்களில்
(OPERATING SYSTEM-ல்) மட்டுமே கொடுக்க முடியும்
நீங்கள் மேற்கண்ட இயங்கு தளங்களில் கடவுச்சொல் பாதுகாப்பு முறையை கொடுத்துவிட்டு மற்ற வகை இயங்கு தளத்தில் (OTHER OPERATING SYSTEM-ல்) சிற்றடக்கியை இணைத்தாலும் கடவுச்சொல்லை கேட்கும்
Comments
Post a Comment