How to turn off bitlocer?
முதலில் உங்கள் சிற்றடக்கியை (PEN DRIVE-ஐ) கணினியில் இணைக்கவும்
அடுத்து சிற்றடக்கி (PEN DRIVE-ஐ) தேர்ந்தெடுத்து அதை வலது விசையை சொடுக்கவும்(RIGHT CLICK செய்யவும்)
அதில் "MANAGE BIT LOCKER" என்பதை தேர்ந்தெடுக்கவும்
கடவுச்சொல் பாதுகாப்பு முறையை நீக்க "REMOVE PASSWORD" என்பதை தேர்வு செய்யவும்
பின்வரும் வழிமுறை மூலமாகவும் கடவுச்சொல் பாதுகாப்பு முறையை நீக்கலாம்முதலில் START-ஐ அழுத்தி CONTROL PANEL-ஐ தேர்ந்தெடுத்து சொடுக்கவும்
கிடைக்கும் CONTROL PANEL-ற்கான திரையில் தேடும் இடத்தில்(SEARCH BOX-ல்) BIT என தட்டச்சு(TYPE) செய்யவும்
அதில் MANAGE BITLOCKER என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்கவும்
வரும் திரையில் உங்கள் கணினியில் உள்ள அனைத்து DRIVE-யும் அதில் எந்த DRIVE கடவுச்சொல் பாதுகாப்பு முறையில் உள்ளது என (பூட்டு சாவி)குறியீடு மூலம் தெரியப்படுத்தும் அதில் TURN OFF BITLOCKER என்பதை சொடுக்கவும்
அது உங்கள் DRIVE-ல் பாதுகாப்பு முறையை நீக்க சற்று நேரம் ஆகும் பாதுகாப்பு முறையை நீக்கலாமா என கேட்கும் அதில் DECRYPT DRIVE-ஐ அழுத்தவும்
DECRYPT ஆக சற்று நேரம் எடுத்துக்கொள்ளும்
DECRYPTION முடிந்ததும் உங்கள் சிற்றடக்கியில் உள்ள ENCRYPION-ற்கான குறியீடு நீக்கப்பட்டிருக்கும்
How to set password protection to pen drive
Comments
Post a Comment